யாழில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்ப பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் தெற்கு, வீரபத்திரர் கோயில் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியிலும் ஊழியராக கடமை புரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனக்கு காய்ச்சல் என தெரிவித்து கடந்த 11ஆம் திகதி வீடு திரும்பியிருந்த நிலையில், வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின் போது நிமோனியா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Comments are closed.