யாழ். இணுவில், ஆச்சிரம வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா – நெளுக்குளம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே நேற்றைய தினம் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் யாழில் வீடொன்றில் தங்கியிருந்து மேசன் வேலை செய்து வந்த நிலையில் மனவிரக்தி காரணமாக தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
இதனையடுத்து அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Comments are closed.