இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்பாக படுகொலை செய்யப்பட்ட இளைஞன்: ஜனாதிபதியிடம் கோரிக்கை

8

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்பாக படுகொலை செய்யப்பட்ட இளைஞன் தொடர்பான உண்மையான விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொலை செய்யப்பட்ட இளைஞனின் உறவினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த இளைஞன், படுகொலை செய்யப்பட்டது தொடர்பிலான விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மன்றேசா வீதியில் 2021-06-21ஆம் திகதியன்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஊறணியை சேர்ந்த ம.பாலசுந்தரம் என்பவர் உயிரிழந்திருந்தார்.

இது தொடர்பில் குறித்த இராஜாங்க அமைச்சரின் மெய்பாதுகாவலர் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவருகின்றது.

இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பிலான சாட்சியங்களை அழிக்கும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளடன் வழக்கினை திசைமாற்றும் செயற்பாடுகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் புதிய ஜனாதிபதி தலையிட்டு தமக்கான நீதியைப் பெற்றுத்தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின்போது, தமது சகோதரன் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட பின்னரே அவர் மீது துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுத்தால் உண்மைகள் வெளிவரும் எனவும் உயிரிழந்தவரின் சகோதரி தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் ஆட்சியாளர்களின் அதிகாரத்திலிருந்த இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு அருகிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதனால் தமது அதிகாரத்தினைக் கொண்டு சாட்சியங்கள் மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி விசேட விசாரணைக்கு பணிப்புரை விடுக்கவேண்டும் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.