ஜப்பானின் (japan) சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கமானது இன்று (18.10.2024) ஜப்பான் – நோடா பகுதியில் இருந்து 48 கிலோமீற்றர் தொலைவில் கிழக்கு – வடகிழக்கு திசையில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கமானது 5.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் தாக்கம் ஜப்பானில் உள்ள இவாட்டே, அகிடா, அமோரி, ஹோகடோ மற்றும் மியாகி ஆகிய மாகாணங்களிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில இடங்களில் மின்சாரம் துண்டிப்பு, கட்டிடங்களில் விரிசல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.