மலையாள திரையுலகின் டாப் நடிகரான மம்முட்டியின் வாரிசு என்ற அடையாளத்துடன் நாயகனாக நடிக்க களமிறங்கியவர் தான் துல்கர் சல்மான்.
படங்கள் நடிக்க தொடங்கியவர் மம்முட்டியின் மகன் என்பதை தாண்டி துல்கர் சல்மான் தந்தை மம்முட்டி என்று கூறும் அளவிற்கு வளர்ந்தார்.
தனது துள்ளலான நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்கள் நடித்து வருகிறார்.
துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் லக்கி பாஸ்கர் படம் தயாராகியுள்ளது.
இந்த நிலையில் துல்கர் சல்மான் ஒரு பேட்டியில் அடுத்து புதுபடங்கள் எதுவும் கமிட்டாகாதது குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், படங்களில் நடிப்பதிலேயே கவனத்தை செலுத்தியதால் என் உடல் நிலையில் கொஞ்சம் அக்கறை காட்ட தவறிவிட்டேன்.
சில உடல்நல குறைபாடுகள் காரணமாகத்தான் நடிப்பதற்கு தற்காலிக இடைவெளி விட்டுள்ளேன், இது யாருடைய தவறும் அல்ல. எனக்கு ஒரு சிறிய இடைவெளி தேவைப்பட்டது, அவ்வளவுதான் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
Comments are closed.