அநுர அரசு கோட்டாபயவின் தம்பியர்கள் என்பதை தமிழர் விவகாரத்தில் காட்ட முனைந்தால் ஆட்சிக் கதிரையில் இருந்து வெளியேறுவதற்கான நாட்களை எண்ணும் நிலைமை உருவாகும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் அவர், “ஜனதா விமுக்தி பெரமுன என்ற அடிப்படை பெரும்பான்மை இனவாதத்தில் வளர்க்கப்பட்டு இன்று தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் ஜனாதிபதி கதிரையில் அமர்ந்து கொண்ட அநுர அரசு, கோட்டாபயவின் தம்பியர்கள் என்பதை தமிழர் விவகாரத்தில் காட்ட முனைந்தால் ஆட்சிக் கதிரையில் இருந்து வெளியேறுவதற்கான நாட்களை எண்ணும் நிலைமை உருவாகும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தமிழர்களுக்கு பொருளாதார பிரச்சினை மட்டும் தான் உள்ளது. அதிகாரப்பகிர்வு தேவையற்றது.13ஆம் திருத்தம் நீக்கப்பட வேண்டும் என கூறிக் கொண்டு அதனை நீக்க புதிய அரசியலமைப்பு குழுவை தன்னிச்சையாக நியமித்த விளைவை எப்படி அனுபவித்தார் என்பதை நாடே அறியும்.
Comments are closed.