விசேட எரிபொருள் சலுகை! கடற்றொழிலாளர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

4

பாரிய எரிபொருள் விலை அதிகரிப்பினால் மீன்பிடித் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதகமான விளைவுகளை நிவர்த்தி செய்யும் வகையில், கடற்றொழிலாளர்களுக்கு  விசேட எரிபொருள் சலுகையை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு 6 மாத காலத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, எரிபொருளாக டீசல் பெற்றுக் கொள்ளும் மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளும் ஒரு லீட்டர் டீசலுக்கு 25 ரூபா பணம் கிடைக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு 300,000 ரூபா வரையான உச்ச எல்லைக்குள் மீன்பிடித்துறையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான கொடுப்பனவு வழங்கப்படும்.

எரிபொருளாக மண்ணெண்ணை பெற்றுக் கொள்ளும் மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளும் 15 லீட்டர் மண்ணெண்ணைக்கு 25 ரூபா பணம் கிடைக்கும் வகையில் ஒரு மாதத்தில் ஆகக்கூடியது 25 நாட்கள் என்ற அடிப்படையில், தொழிலில் ஈடுபடும் நாட்களுக்கு மட்டும் வரையறுக்கப்படும் வகையில் ஒரு லீட்டர் மண்ணெண்ணைக்கு 25 ரூபா மீன்பிடித்துறையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான கொடுப்பனவு வழங்கப்படும்.

மேலும், டீசல் மற்றும் மண்ணெண்ணை விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் டீசலுக்கான உச்ச நிவாரண விலை 250 ரூபா மட்டத்திலும், மண்ணெண்ணைக்கான உச்ச விலை 150 ரூபா மட்டத்திலும் ஆகக்கூடியது ஆறு மாத காலம் வரை டீசலுக்காக ஆகக்கூடியது சந்தை விலையில் இருந்து 7.5 சதவீத நிவாரணமும், மண்ணெண்ணைக்கு ஆகக்கூடியது சந்தை விலையில் இருந்து 12.5 சதவீத நிவாரணமும் மீனவர்களுக்கு கிடைக்கும் வகையில் மேற்குறித்த நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.