நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண்கள் இன்றும் (15) நாளையும் (16) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விருப்பு எண்களை ஆய்வு செய்த பின், குறித்த ஆவணங்கள் மீண்டும் மாவட்ட செயலாளர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுவரையான காலப்பகுதியில் அனைத்து மாவட்டங்களின் விருப்பு எண்களையும் தேர்தல் ஆணைக்குழு பெற்றுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் வேட்பாளர் ஒருவர் செலவிட வேண்டிய பணத்தின் அளவு குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Comments are closed.