புதிய அரசாங்கம் எதிர்வரும் நவம்பர் மாதம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்காது என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பது பொருத்தமானதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், அரசாங்கம் குறைநிரப்பு பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளது.
எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கு குறைநிரப்பு பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து பின்னர் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
Comments are closed.