அதிகரிக்கப்பட்ட விவசாயிகளுக்கான உர மானியம் வழங்கும் பணிகள் இன்று (14) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, முதற்கட்டமாக 15,000 ரூபா உர மானியம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக 10,000 ரூபா உர மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த உர மானியம் வழங்கும் பணிகள் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன் பின்னர் பொலன்னறுவை, அனுராதபுரம், மகாவலி பிரதேசம் உள்ளிட்ட விவசாயிகளுக்கு உர மானியம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.