அநுரகுமாரவுக்கு ஒரு தடவையே தோல்வி – ஜப்பானிய பிரதமர்

9

இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு அநுரகுமார திஸாநாயக்க இரண்டு தேர்தல்களில் மாத்திரமே போட்டியிட வேண்டியிருந்தததாகவும் தாம் ஜப்பானின் பிரதமராவதற்கு ஐந்து தடவைகளாக போட்டியிட வேண்டியேற்பட்டதாகவும் ஜப்பானிய புதிய பிரதமர் சிகெரு இசிபா (Shigeru Ishiba) தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் ரொட்னி பெரேராவை ஜப்பானிய நாடாளுமன்றில் வைத்து சந்தித்த போது, அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு தமது வாழ்த்துக்களை தெரிவிக்கும்போதே ஜப்பானிய பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அநுரகுமார முதல் தடவையில் தெரிவு செய்யப்படவில்லை என்பது மோசமானதல்ல. தாம் ஐந்து முறை பிரதமர் பதவிக்காக முயற்சிக்கவேண்டியிருந்தது என்று ஜப்பானிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.