நடைபெறவுள்ள பொதுதேர்தலில் யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும் சிறீதரனும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் நேற்று (05) இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை மற்றும் அம்பாறையில் தமிழரசுக் கட்சி சின்னத்தில் போட்டியிட ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதுடன், நானும் சிறிதரனும் யாழில் போட்டியிடுவோம். அத்துடன் எமது கட்சியில் போட்டியிட பெண்களுக்கு அழைப்பு விடுகின்றோம். என்றார்
Comments are closed.