சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு!

11

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தேசிய மக்கள் சக்திக்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுதந்திரக் கட்சியின் உப தவிசாளர் கீர்த்தி உடவத்த இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது இவ்வாறு தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ள ஊடக சந்திப்பில் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் ஹெக்டர் பெத்மகே உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட தொகுதி அமைப்பாளர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பிரத்தியேக செயலாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்களது ஆதரவினை பெற்றுக்கொள்ள தேசிய மக்கள் சக்தி இணங்கினால் நிபந்தனையற்ற அடிப்படையில் ஆதரவு வழங்க தயார் என கீர்த்தி உடவத்த தெரிவித்துள்ளார்.

Comments are closed.