அதிகரித்து வரும் வங்கி மோசடி நடவடிக்கைகள் குறித்து சம்பத் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சம்பத் வங்கி (Sampath Bank) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”வங்கி மோசடி நடவடிக்கைகள் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவதை நாங்கள் அவதானிக்கும்போது, பின்வருவனவற்றை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
உங்கள் தனிப்பட்ட தகவலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். தயவு செய்து உங்கள் கடவுச் சொற்கள், PIN இலக்கங்கள், OTP இலக்கங்கள் போன்ற இரகசிய தகவல்களை எந்த சூழ்நிலையிலும் மூன்றாம் தரப்பினருடன் பகிர்வதை தவிர்க்கவும்.
கணக்கு உள்நுழைவுக் கட்டுப்பாடு, உங்கள் கணக்குகளை இயக்க மூன்றாம் தரப்பினரை அனுமதிக்காதீர்கள், ஏனெனில் அதிகாரமளிக்கப்படாத கொடுக்கல் வாங்கல்கள் நிகழும் பட்சத்தில் நீங்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டியதுடன் சட்ட நடைமுறைப்படுத்தல் முகவராண்மைகளுடன் ஒத்துழைக்க வேண்டப்படுவீர்கள் என்பதை தயவு செய்து கருத்திற்கொள்ளவும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments are closed.