நாட்டில், பாரியளவிலான தேங்காய் எண்ணெய் இறக்குமதியால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பில் நேற்று(30.09.2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கருத்து தெரிவித்த சங்கத்தின் பிரதிநிதி புத்திக டி சில்வா,
“வருடாந்தம் சுமார் 80,000 மில்லியன் கிலோ செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட ஆரோக்கியமற்ற தேங்காய் எண்ணெய் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் ஆரோக்கியமற்ற தேங்காய் எண்ணெயை நாடு முழுவதும் விநியோகிக்கும் நயவஞ்சக நடவடிக்கை இன்னும் தொடர்கிறது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.