இந்திய கடற்றொழிலாளர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததற்கும், இரண்டு படகுகளை பறிமுதல் செய்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக கடற்றொழிலாளர்கள் நேற்று (29) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டு இராமேஸ்வரம் கடற்கரையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் வீதிகளில் அமர்ந்து குரல் எழுப்பி முழக்கங்களை எழுப்பினர்.
சிறைப்பிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவு அருகே உள்ள பால்குடா பகுதியில் 309 படகுகளுடன் கடலுக்குச் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக இலங்கையால் கைது செய்யப்பட்ட 17 இந்தியர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
Comments are closed.