புதிதாக அமைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் முதலாவது அமைச்சரவை மாநாடு இன்று (30) மாலை நடைபெறவுள்ளது.
அங்கு அமைச்சரவையின் ஆரம்ப முடிவுகளை அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கையின் புதிய மூன்று பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவையின் பேச்சாளராக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் நாட்டைப் பாதிக்கும் பல முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த அமைச்சரவை உலகிலேயே மிகச் சிறிய அமைச்சர்கள் கொண்ட குழுவாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.