யாழ்ப்பாணத்தில் மூடப்பட்டுள்ள வீதிகளை திறக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

11

 யாழ்ப்பாணத்தில் மூடப்பட்டுள்ள வீதிகளை மீண்டும் திறக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் வீதிகளை திறப்பது நல்லிணக்கத்தையும் பிராந்திய அபிவிருத்தியையும் பலப்படுத்தும் என இராமநாதன் தமது எக்ஸ் பக்கத்தில் எடுத்துரைத்துள்ளார்.

கொழும்பின் வீதி அணுகல் சீர்திருத்தங்களுக்கு அடுத்தே, யாழ்ப்பாணத்தின் இந்த முக்கிய வீதிகளை மீண்டும் திறக்குமாறு அவர் கோரியுள்ளார்.

கொழும்பில் உள்ள முக்கிய வீதிகளை இன்று முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதை அடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள சேர் பரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தையை திறக்குமாறு ஜனாதிபதி பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Comments are closed.