தமிழ் நாட்டை சேர்ந்த 37 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், இந்திய நாட்டினரை விரைவில் விடுவிக்க இலங்கை அதிகாரிகளுடன் இந்த விவகாரம் தொடர்பில் பேசுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜெய்சங்கருக்கு அவர் எழுதிய கடிதத்தில், இலங்கை அதிகாரிகளால், இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு, அநியாயமாக சொத்துக்களைக் கைப்பற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்களால் அதிக அபராதம் விதிக்கப்படுவதுமான தொடர் சம்பவங்கள் கண்டனத்துக்குரியவை என்றும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments are closed.