சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் (Tharman Shanmugaratnam) மற்றும் பிரதமர் லோரன்ஸ் வோங் (Lawrence Wong ) ஆகியோர் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு, இதனை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம், தமது வாழ்த்து கடிதத்தில், நாட்டை முன்னோக்கி வழிநடத்துவதற்கு இலங்கை மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் நிரூபணம் இது என்று குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரும் இலங்கையும் நீண்டகால உறவுகளை அனுபவித்து வருகின்றன, இரு நாடுகளின் நெருங்கிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மக்கள் உறவுகளால் ஆதரிக்கப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்
2025 ஆம் ஆண்டில் 55 வருட இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை சிங்கப்பூர் பிரதமரும் அநுரகுமாரவுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
Comments are closed.