பராமரிப்பு பணிகள் தொடர்பில், தொடருந்து திணைக்களம் மக்களுக்கு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி தொடருந்து பாதையில் பங்கிரிவத்தை தொடருந்து கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாளை(29.09.2024) காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை கடவை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு தொடருந்து திணைக்களம் மக்களை கோரியுள்ளது.
Comments are closed.