நாடாளுமன்றக் கட்டிடத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் குஷானி ஜயவர்த்தன அறிவித்துள்ளார்.
அதன் பிரகாரம், எதிர்வரும் நாட்களில் தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அத்தியாவசியமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
நாடாளுமன்றம் தற்போதைக்கு கலைக்கப்பட்டுள்ள நிலையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும், புதிய நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக நாடாளுமன்றக் கட்டிடத்தை புனரமைப்பதில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற அமர்வின் போது, ஜனாதிபதி அக்கிராசன உரையொன்றை ஆற்றலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு ஏற்றவாறு நாடாளுமன்ற சபை மண்டபம் புனரமைக்கப்பட்டு நவீனமயப்படுத்தவுள்ளது
Comments are closed.