ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இன்று ஜனாதிபதி வெளியிடப்பட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் ஆயுதம் தாங்கிய படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் முதல் முறையாக பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதம் தாங்கிய முப்படையினரை அழைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இதுவாகும்.
Comments are closed.