அநுரவிற்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி

11

இலங்கையின் (Sri Lanka) ஒன்பதாவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுரகுமார திசாநாயகவுக்கு (Anura Kumara Dissanayake) அமெரிக்க (America) ஜனாதிபதி ஜோ பைடன் ( Joe Biden) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் தனது வாழ்த்து செய்தியினை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில், அநுரவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு பாதுகாப்பு மற்றும் செழிப்பை மேம்படுத்த அநுரவுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோ பைடனிற்கு நன்றி தெரிவித்து அநுர வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் அன்பான நல்வாழ்த்துக்களை நான் பாராட்டுகிறேன்.

எனது தலைமையிலான இலங்கையானது எமது நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவதற்காக அமெரிக்காவுடன் நெருக்கமாக செயற்படும்.

அமைதியான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான எனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Comments are closed.