இலங்கை எந்த ஒரு அதிகார முகாமுடனும் தன்னை இணைத்துக் கொள்ளாது என்று புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியாவும் சீனாவும், இலங்கையின் மதிப்புமிக்க நண்பர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனான உறவுகள் முக்கியமானவை என இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம், மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவுடனான உறவுகளிலும் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தனது அரசாங்கத்தின் புதிய வெளியுறவுக் கொள்கையின் பரந்த வரையறைகளை கோடிட்டுக் காட்டியதுடன், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனை தலைமையகமாகக் கொண்ட ஊடகம் ஒன்றிடம் அவர் இந்தக் கருத்துக்களை செப்டெம்பர் 3ஆம் திகதி வெளியிட்டுள்ளார்.
Comments are closed.