புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்ப்பதாக இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து மேற்படி வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளது.
குறித்த கடிதத்தில், மக்களுக்கு விரும்பத்தக்க பலன்களை வழங்கக்கூடிய விவேகமான வளர்ச்சி உத்திகளை உருவாக்குவதில், புதிய ஜனாதிபதி அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments are closed.