அரசு வாகனங்கள் மற்றும் தமது அலுவலகத்தை திருப்பி அளித்து விட்டதாக எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekara) தெரிவித்துள்ளார்.
இதன்போது, தனது கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் வலுவான நிதி நிலை, போதுமான அளவு பெட்ரோலிய பொருட்கள்> மின் உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகத்திற்காக நிலக்கரி இருப்பு என்பவற்றை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து நிறுவனங்களும் இப்போது சிறப்பான இருப்பு நிலைக் குறிப்பில் உள்ளன.
அதன் சேவைகளுக்கான செலவுகளை மீட்டெடுக்கின்றன, விநியோகஸ்தர்களுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்துகின்றன.
அத்தோடு, நிலுவையில் உள்ள கடனைச் செலுத்துகின்றன மற்றும் திறைசேரிக்கு அது உருவாக்கும் கூடுதல் வருவாயை வழங்குகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.