தேர்தலில் படுதோல்வியின் பின்னர் மக்களுக்கு நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு

12

எமக்கு பாடம் கற்பிப்பது மக்களுக்கு அவசியமாயின் அந்த பாடத்தை சிறந்த முறையில் கற்றுக்கொண்டு மீண்டும் சவால்களை வெற்றிக்கொள்ள தயாராகுவேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,’உங்களுக்கான சிறந்த நாடு’ என்ற இலக்கை அடைவதற்காக முன்வைத்த கொள்கைத் திட்டங்களை ஏற்றுக்கொண்ட ஒரு தரப்பினரை மறக்க முடியாது.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட என்னை அன்புடன் ஏற்றுக்கொண்டீர்கள். ஒருசிலர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவில்லை.இருப்பினும் அவர்கள் எமது கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு எமது கொள்கைகளை ஏற்று ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீதும், என்மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்க்கட்சிகள் அன்று புறக்கணித்த 69 இலட்ச மக்களாணை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானமிக்கதாக காணப்படுவதை ஜனாதிபதி தேர்தல் வாக்குகள் ஊடாக அவதானிக்க முடிகிறது. என்றார்

Comments are closed.