ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நந்திக சனத் குமாநாயக்க அபிவிருத்தி பொருளாதாரத்தில் கலாநிதி பட்டம் பெற்றவர் மற்றும் வறுமை ஒழிப்பு போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.
அவர் இலங்கை சுங்கத்தின் பிரதிப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவி ஏற்ற பின்னர் வழங்கப்பட்ட முதல் நியமனம் இதுவாகும்.
Comments are closed.