ஜனாதிபதி தெரிவு குறித்து தேர்தல் ஆணைக்குழு வௌியிட்ட வர்த்தமானி

7

15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்கிணங்க, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

விசேட வர்த்தமானி மூலம் தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகளில் 50% வீதம் வேட்பாளர் ஒருவரினால் பெறப்படாத நிலையில், முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் உள்ள வேட்பாளர்களுக்கான இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டன.

இதன்போது, 105,264 வாக்குகளை அனுரகுமார திசாநாயக்க பெற்றதோடு, சஜித் பிரேமதாச 167,867 வாக்குகளைப் பெற்றார். இதன்படி, அநுரகுமார திசாநாயக்கவின் மொத்த வாக்குகள் 5,740,179 ஆகவும், சஜித் பிரேமதாசவின் வாக்குகள் 4,363,035 ஆகவும் அதிகரித்தது.

தேர்தல் முடிவுகளின்படி, இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.  

Comments are closed.