புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (23) பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்களும் இன்று பதவியிலிருந்து விலகவுள்ளனர்.
இதன்படி தற்போது அமைச்சுப் பதவிகளில் கடமையாற்றும் அமைச்சர்களும் அவர்களது தனிப்பட்ட ஊழியர்களும் வெளியேறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், புதிய ஜனாதிபதி தனது கடமைகளை ஆரம்பித்த பின்னர் அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குரியவர்கள் அமைச்சரவைக்கு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Comments are closed.