அமெரிக்க அதிபர் தேர்தல் :கருத்து கணிப்பில் முன்னிலை பெற்றவர் யார்..!

22

அமெரிக்காவில்(us) எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்(kamala harris), குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்(donald trump_ போட்டியிடுகின்றனர்.

கடந்த 10-ம் திகதி இரண்டு வேட்பாளர்களும் தொலைக்காட்சி நேரடி விவாதத்தில் பங்கேற்றனர்.

இந்த நிலையில் நேரடி விவாதம் மற்றும் அதற்கு முன்பு நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக நேரடி விவாதத்திற்கு பின்னர் 11-ம் திகதி முதல் 19-ம் திகதி வரை ரொய்ட்டர்ஸ்/இப்சோல் நடத்திய கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக 47 சதவீத வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் :கருத்து கணிப்பில் முன்னிலை பெற்றவர் யார்..! | Us Presidential Election Who Is Leading

இதன்மூலம் ட்ரம்ப் பின்னடைவை சந்தித்துள்ளமை தெரியவந்துள்ளது.

Comments are closed.