ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்வது அனைவரினதும் கடமை : வாக்களித்த பின்னர் சஜித் கருத்து

14

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கை இன்று (21) காலை பதிவு செய்தார்

ராஜகிரிய கொட்டுவேகொட விவேகராம புராண விகாரையில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் அவர் வாக்களித்தார்.

அதன் பின்னர் கருத்து தெரிவித்த அவர், ஜனநாயகத்தை பாதுகாத்து சமாதானத்துடனும் நட்புடனும் ஒற்றுமையுடனும் செயற்படுவது அனைவரினதும் கடமையும் பொறுப்பும் என தெரிவித்தார்.

இந்த தேர்தலை ஜனநாயக ரீதியில் அமைதியுடனும் நட்புடனும் நடத்தி ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்வது நம் அனைவரின் பொறுப்பும் கடமையும் ஆகும் என குறிப்பிட்டார்.

Comments are closed.