திருகோணமலை மாவட்டத்தின் மூத்த குடிமகன் 106 வயதில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகளானது நாடளாவிய ரீதியில் இன்று (21) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கையின் அனைத்து பிரஜைகளும் தமது வாக்களிக்கும் நடவடிக்கைகளை காலை ஏழு மணியிலிருந்து ஆரம்பித்துள்ளனர்.
இதனடிப்படையில், திருகோணமலையின் மூத்த பிரஜையான ஜோன் பிலிப் லூயிஸ், நாட்டில் இதுவரை காலமும் குறிப்பாக ஒன்பது தடவையாக இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லதோர் ஆட்சியாளர் வரவேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும் அத்துடன் இறைவனது ஆசியுடன் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தலிலும் வாக்களிக்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.