இலங்கை கடற்றொழிலாளர்கள் மூவர் தமிழ்நாட்டில் கைது.!

7

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்கரையிலிருந்து கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் மூவர் எல்லை தாண்டிய குற்றத்திற்காக இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் துண்டிகிராம கடலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (17) மாலை 2.00 மணியளவில் இந்திய கடலோர காவல்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்புத்துறையை சேர்ந்த ஒருவரும் வடமராட்சி கிழக்கு பிரதேசம் உடுத்துறையை சேர்ந்த இருவரும் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நடுக்கடலில் கடற்றொழிலாளர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காற்றின் வேகம் காரணமாக படகு திசை மாறி இந்திய கடற்பரப்புக்குள் வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்களை மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments are closed.