புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாக தயாராகும் அமெரிக்கா

8

இலங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியுடன் நெருக்கமாக செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் தமது எக்ஸ் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“அத்துடன், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதிப்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்திற்கு எடுக்கப்படக்கூடிய மிக முக்கியமான நடவடிக்கையாகும்.

சர்வதேச ஜனநாயக தினமான இன்றைய தினத்தில், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள், நீதி போன்ற வலுவான மற்றும் நிலையான ஜனநாயகத்தின் கொள்கைகளை நாங்கள் கொண்டாடுகிறோம்.

தேர்தல்கள் மூலம் தங்கள் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு கருத்து இருப்பதை உறுதிசெய்கிறோம்.

இலங்கை மக்களால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.”  என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

ஏற்கனவே இலங்கையில் குறித்த நாடுகளின் நலன்சார்ந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலேயே இந்த அவதானிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.