ஐக்கிய மக்கள் சக்தியின் கூற்றை நிராகரித்த ஜனாதிபதி ரணில்

7

ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து தாம் விலகப் போவதாக கூறப்படும் செய்திகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய விக்ரமசிங்க, செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் இருந்து, தாம் விலகப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தி கூறிவருகிறது.

எனினும் தாம் பதவி விலகுபவன் அல்ல என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள அனைத்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களையும் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையுமாறு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

Comments are closed.