அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தவருக்கு நேர்ந்த கதி!

9

குருநாகல், மாதவ பிரதேசத்தை சேர்ந்த முட்டை வியாபாரி ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச சில்லறை விலையை விட, அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், பிலெஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

Comments are closed.