தெரிவு செய்யப்படவிருக்கும் அரசாங்கம் தொடர்பில் ஐ.எம்.எப் வெளியிட்டுள்ள கருத்து

8

மக்களினால் தெரிவு செய்யப்படும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என சர்வதேச நாணய நிதியதம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலானது மக்களினால் தீர்மானிக்கப்பட வேண்டியதொன்று என தெரிவித்துள்ளது.

 இலங்கை தொடர்பிலான மூன்றாவது மீளாய்வு நடவடிக்கை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைபெறும் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜுலி கொஸாக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் எதிர்நோக்கிய மிக மோசமான நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடுமையான முயற்சியில் வென்றெடுக்கப்பட்ட விடயங்களை இலங்கை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பு வரையறுக்கப்பட்டது எனவும், அரசாங்கத்திற்கும் கடன் கொடுனர்களுக்கும் இடையிலேயே பிரதான இணக்கப்பாடுகள் எட்டப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.