புதிய கருத்து கணிப்பின் பிரகாரம் முன்னணி வகிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்!

8

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான புதிய கருத்து கணிப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் முன்னணி கருத்து கணிப்பு நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

நம்பர்கள் டொட் எல்.கே (numbers.lk/)என்ற நிறுவனம் இந்தக் கருத்துக் கணிப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு 34.5 வீத ஆதரவு காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

32.4 வீத ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க இரண்டாம் இடத்தினை வகிப்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு 31.5 வீத ஆதரவு காணப்படுவதாக மேலும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச பெற்றுக்கொள்ளக்கூடிய வாக்குகள் தொடர்பில் இந்த நிறுவனம் சரியான எதிர்வு கூறல்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.