வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெறப்போகும் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி

7

இலங்கை வரலாற்று அதிகபடியான வாக்குகளை பெற்று வெற்றிபெறப்போகும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே இருப்பார் என முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முழு நாடும் அனுரவுக்கு என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மறுமுனையில் சஜித் இப்போதே ஜனாதிபதியாகிவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்.

சஜித் மற்றும் அநுர உள்ளிட்ட இவர்கள் அனைவரும் வேடிக்கை பாத்திரங்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதிர்ச்சியானவர்.

அன்று நாட்டில் கோட்டாபய ராஜபக்ச மட்டுமே மிஞ்சியிருந்தார். இறுதியாக தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நாட்டை காப்பாற்ற வந்தார்.

நாட்டு மக்கள் வாழத் தகுந்த வகையில் நாட்டின் நிலைமையை மாற்றியமைத்தார். அதன் பலனாக இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 50 இலட்சம் வாக்குகளுக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

எனவே இலங்கை வரலாற்று அதிகபடியான வாக்குகளை பெற்று வெற்றிபெறப்போகும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே இருப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.