ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் 10 நாட்களுக்கு போலிச்செய்தி அலை வீசும்

13

பதவிக்கு வந்து ஆறு மாதங்களுக்குள் தமது கட்சி அரசாங்கத்தைக் கைவிடும் என்று கூறப்படும் கருத்தை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார நிராகரித்துள்ளார்.

“முன்னர் நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று சொன்னார்கள். தற்போது எங்கள் அரசாங்கம் ஆறு மாதங்கள் நீடிக்காது என்று சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்” என்று நேற்று குருநாகலில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய திஸாநாயக்க கூறியுள்ளார்.

தமது தலைமையில் அமைக்கப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நாட்டின் வரலாற்றில் வலுவானதாக இருக்கும் என்று அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான இறுதிப் பத்து நாட்களில் போலிச் செய்திகள் மற்றும் தவறான செய்திகள் அலை வீசும் என்றும், இருந்த போதிலும், தேசிய மக்கள் சக்தி வெற்றியில் தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால் “எங்கள் எதிரிகள் கலக்கமடைந்துள்ளனர். எமக்கு எதிரான பாரிய சதித்திட்டம் தொடர்பில் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, எனினும் அதற்கு நாங்கள் பலியாக மாட்டோம்” என்று அனுரகுமார கூறியுள்ளார்.

Comments are closed.