ரணில் விக்ரமசிங்கவுக்கு தபால் மூல வாக்குகளில் அனுகூலம் உண்டு என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
“இயலும் ஸ்ரீலங்கா” பியகம தொகுதியின் பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், ”கடந்த காலங்களில் கோவிட் தொற்றுநோய் இருந்தது, பொருளாதார நெருக்கடி இருந்தது. ஆனால் நாங்கள் எந்த ஒரு அரச ஊழியரையும் நீக்கவில்லை.
மேலும் அரச ஊழியர்களின் கொடுப்பனவை அதிகரிக்க தேவையான பின்னணி உருவாக்கப்பட்டது. அந்த நேரத்தில், எரிபொருள் மற்றும் எரிவாயு வாங்க 20 மில்லியன் டொலர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இன்று 07 பில்லியன் டொலர்களை கையிருப்பாக உருவாக்க முடிந்ததால், அரச ஊழியர்களின் உதவித்தொகையை அதிகரிக்கவும், சம்பளத்தின் மீதான வரிகளை குறைக்கவும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க பொருளாதாரத்தை சரியாக முகாமைத்துவம் செய்தார்.”என கூறியுள்ளார்.
Comments are closed.