பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா லக்ஷ்மி சொத்து மதிப்பு.. பிறந்தநாள் ஸ்பெஷல்

6

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்

இவர் தமிழில் பொன் ஒன்று கண்டேன், பொன்னியின் செல்வன் 2, கார்கி போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார். அதை தொடர்ந்து, முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வெளிவந்த கட்டா குஸ்தி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஒரு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதன்முலம், இவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் நடிகை ஐஸ்வர்யா கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று தனது 34 – வது பிறந்தநாளை கொண்டாடும் ஐஸ்வர்யா லக்ஷ்மி சொத்து மதிப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூ. 12 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக இவர் ரூ. 1.5 கோடி சம்பளம் வாங்கியதாகவும் கூறுகின்றனர். ஆனால், இவை யாவும் அதிகாரபூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.