ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா மாவட்டத்தில் 85 வீத வாக்குகளை பெற்றுக்கொள்வார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வரலாற்று ரீதியான வெற்றியை பதிவு செய்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பாரியளவு வாக்குகளை அவர் பெற்றுக்கொள்வார் என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 11 பேர் தவிர்ந்த ஏனைய அனைவரும் ஜனாதிபதியுடன் இணைந்து இருப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியனவும் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பழனி திகாம்பரத்தின் கட்சி இரண்டாக பிளவடைந்து உள்ளதாகவும் அவரது செயற்பாடுகளை பிடிக்காதவர்கள் தம்முடன் பேசி வருவதாகவும் எஸ்.பி. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.