அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு! நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

6

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு திறைசேரி மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பிளவர் வீதியில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று(04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதி இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய வெறும் ஆவணம் அல்ல.

பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது அரச ஊழியர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், அதனை அறவே குறைக்கக் கூடாது என்று தெரிவித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த யோசனையை கடுமையாக நிராகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் எவ்வகையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் பொருளாதார நெருக்கடியான காலத்திலும் கூட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாவை வழங்கியதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.