சஜித் பிரேமதாசவால் (Sajith Premadasa) ஒரு காலமும் அனுர குமார திஸாநாயக்கவை (Anura Kumara Dissanayake) தோற்கடிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை மஹியங்கனையில் (Mahianganai) நேற்றைய தினம் (04) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அனைத்து நாட்களிலும் நாடாளுமன்றத்தில் எழுந்து புறம் பேசிவிட்டு இரண்டு மூன்று நாட்களை வீணடித்து விட்டு கடைசியில் என்ன நடந்தது ?
சிலர் நினைக்கின்றார்கள் சஜித்தால் முன்னோக்கி கடந்து செல்ல முடியுமென ஆனால் சஜித்தால் முடியாது.
அத்தோடு சஜித் செய்கின்ற முட்டாள் தனமான செயற்பாடுகளால் அவர் அனுரவிற்கு உதவி செய்வாராக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.