ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சந்திரிக்காவின் நிலைப்பாடு

6

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் நடுநிலை வகிக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா விசேட அறிவிப்பொன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் குறிப்பிட்ட தரப்பொன்றுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக வெளியான தகவல்களை சந்திரிக்கா அம்மையார் மறுத்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்கள் தன்னிடம் ஆதரவு கோரிய போதும், அதனை நிராகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள தேர்தலில் யாருக்கும் சார்பின்றி நடுநிலை வகிக்கத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாார்.

Comments are closed.