அரச பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள 75ஆயிரம் வாகன அனுமதிப்பத்திரங்கள்

9

கடந்த 5 வருடங்களாக அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 75,000 வாகன அனுமதிப்பத்திரங்களில் இன்னும் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவில்லை. இது குறித்து சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் நன்கொடையாளர் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் குறித்த அனுமதிப்பத்திரங்களில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவார் என அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சம்பள விகிதங்கள் கிடைப்பதால் அவர்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.

இந்தநிலையில் அவர்களில் பெருமளவானோர் வாகனங்களை கொள்வனவு செய்வதாகவும் அல்லது அவர்களது நிதித் தேவைகளுக்காக அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.  

Comments are closed.