நாடாளுமன்றத்தில் மூன்று சட்டமூலங்கள் நிறைவேற்றம்!

11

நாடாளுமன்றத்தில் மூன்று சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த சட்டமூலங்கள் மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் நேற்று(03.09.2024) இடம்பெற்றது.

இதற்கமைய வெளிநாட்டுத் தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்று அங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் என்பன நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வெளிநாட்டுத் தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்று அங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகிய சட்டமூலங்களுக்கு குழுநிலையில் திருத்தங்கள் இணைக்கப்பட்டு, திருத்தங்களுடன் இவை நிறைவேற்றப்பட்டன.

அதேநேரம், வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

Comments are closed.